உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில்
வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே
எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு
டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்.
சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி
இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும்
வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.
பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு
என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல்
பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக
மாறியதற்கு காரணம்.
மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு
பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.
இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன்
பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய
உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் உருவாக ஆரம்பித்து
தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது
விஞ்ஞானம்இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி
ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை
யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது.
இவ்வாறெல்லாம் பல
தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம்
தெரியாதவர்கள் சிலர்..